Tuesday, February 23, 2010 அப்பாவி தமிழன்

வணக்கம் வலையுலக நண்பர்களே .தமிழ் வலையுலகில் குறிப்பிடும் வகையாக இப்போது பல திரட்டித் தளங்கள் வந்து விட்டன .இவற்றின் ஒவ்வொரு ஓட்டளிப்புப் பட்டையையும் தனித் தனியே உங்கள் ப்ளாக்கில் இணைப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் அவ்வாறு இணைத்தாலும் ஓட்டளிப்புப் பட்டைகள் ஒவ்வொன்றும் ஒரு சீராக இல்லாமல் இருப்பது நம் ப்ளாக்கின் அழகையும் கெடுத்து விடும் .மேலும் template மாற்றும் போது மீண்டும் ஒவ்வொரு ஓட்டளிப்புப் பட்டையை இணைப்பது எரிச்சல் தரும் விடயமாகும் .


எனவே தமிழ்10 , தமிளிஷ் , நம்குரல் , உலவு போன்ற தளங்களின் ஓட்டளிப்புப் பட்டைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே சீராக உங்கள் தளத்தில் தோன்றும் வகையில் வடிமைத்து இருக்கிறேன் .இதனால் நீங்கள் ஒருமுறை இதனை உங்கள் தளத்தில் இணைத்து விட்டாலே நான்கு ஓட்டளிப்புப் பட்டைகளும் ஒரே சீரகாத் தோன்றும் .மேலும் நீங்கள் template மாற்றும் போதும் இலகுவாக ஒரே முறையில் அணைத்து ஓட்டளிப்புப் பட்டைகளையும் இணைத்து விடலாம் .எனக்குத் தெரிந்த திரட்டித் தளங்கள் அனைத்தையும் இதில் இணைத்துள்ளேன் ஏதேனும் விட்டுப் போயிருந்தால் கூறுங்கள் .இணைத்து விடுகிறேன் .(உலவு தளத்துக்கு ஓர் வேண்டுகோள் - அனைத்து திரட்டி தளங்களின் ஓட்டுப் பட்டையும் ஒரே அளவில் உள்ளது உளவின் அளவு சிறிது குறைவாக உள்ளதால் ஒரு மாதிரி உள்ளது ...இது என் தனிப்பட்ட கருத்து)

ஓட்டளிப்புப் பட்டையை எவ்வாறு உங்கள் தளத்தில் இணைப்பது



  • Blogger -> Layout -> Edit HTML க்கு செல்லவும்.
  • "Expand Widget Templates" checkboxசை சொடுக்கவும்.
  • "<data:post.body/>"யை தேடவும்.
  • "<data:post.body/>" கீழ் இந்த கோடினை சேர்க்கவும்,

<div>

<script type='text/javascript'>

submit_url =&quot;<data:post.url/>&quot;

</script>

<script src='http://tamil10.com/submit/evb/button2.php' type='text/javascript'>

</script>

<script type='text/javascript'>

submit_url =&quot;<data:post.url/>&quot;

</script>

<script src='http://www.tamilish.com/tools/voteb.php' type='text/javascript'/>

<script type="text/javascript">submit_url = '<data:post.url/>';</script>

<script type="text/javascript" src="http://www.namkural.com/evb/button.php"></script>
<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

</div>

  • "Save Template" பட்டனை சொடுக்கவும்.
  • வாக்களிப்பு பட்டை தங்கள் ப்ளாகில் சேர்ந்துவிடும்.

0 comments:

Post a Comment