ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

Thursday, November 25, 2010 அப்பாவி தமிழன்

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விரும்பும் கூட்டணி வெற்றிபெற வேண்டுமானால் இதுபோன்ற நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி எடுக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை நடந்தது. இந்த பாதயாத்திரை குழு நேற்று சென்னை வந்தடைந்தது.

funn

அப்பாவி தமிழன்

Friday, November 5, 2010 அப்பாவி தமிழன்

பொதுவாக அனைவரும் புகைப்படங்கள் , மற்றும் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு போடோஷாப் ( photoshop) அல்லது( ms paint ) போன்ற மென்பொருட்களையே பயன்படுத்துவர் . குறைவான கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு இந்த மென்பொருட்கள் போதுமானதே ஆனால் பல் வேறு கோப்புகளை ஒரே நேரத்தில் scan செய்வதற்கு இந்த மென்பொருட்கள் பொருத்தமானது இல்லை ஏன் எனில் ஒவ்வொரு தடவை ஸ்கேன் செய்யும் போதும் அதை உடனே save செய்து விட வேண்டும் . உதாரணத்திற்கு 50 பக்கங்கள் கொண்ட ஒரு கோப்பை ( document ) ஸ்கேன் செய்ய வேண்டுமெனில் 50 தடவை ஒவ்வொரு பக்கத்தையும் சேமிக்க ( save ) செய்ய வேண்டும் .இவ்வாறு செய்வது சலிப்பையும் ,மற்றும் நேரத்தை விரயமாக்கும் ஓர் செயலாகும் .


இவ்வாறு நேரம் விரயம் ஆகுவதை தவிர்க்கவென்றே அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருளே ( scan to pdf ) ஆகும் .இந்த மென்பொருளின் மூலம் 50 என்ன ஒரே நேரத்தில் 500 பக்கங்களை கூட எளிதாக ஸ்கேன் செய்யலாம் . அதோடு ஸ்கேன் செய்த பக்கங்களை எளிதாக ( .pdf , .tiff , .psd ) போன்ற வடிவத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் .பல்வேறு ஸ்கேன் மென்பொருட்களை விட குறைந்த அளவான நேரத்திலயே எளிதாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் .எந்த ஒரு scanner ஐயும் இந்த மென்பொருள் மூலம் எளிதாக உபயோகப்படுத்தலாம் .அலுவலகம் மற்றும் வீட்டுத்தேவை இரண்டுக்கும் இந்த மென்பொருள் ஏற்றது .நீங்கள் பல்வேறு கோப்பு மற்றும் படங்களை அடிக்கடி ஸ்கேன் செய்பவராக இருந்தால் இந்த மென்பொருள் நிச்சயம் உங்களுக்கே . கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .


Read more: http://tamilwares.blogspot.com/2010/11/photoshop-ms-paint.html#ixzz14SEgItxm

Tuesday, February 23, 2010 அப்பாவி தமிழன்

வணக்கம் வலையுலக நண்பர்களே .தமிழ் வலையுலகில் குறிப்பிடும் வகையாக இப்போது பல திரட்டித் தளங்கள் வந்து விட்டன .இவற்றின் ஒவ்வொரு ஓட்டளிப்புப் பட்டையையும் தனித் தனியே உங்கள் ப்ளாக்கில் இணைப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் அவ்வாறு இணைத்தாலும் ஓட்டளிப்புப் பட்டைகள் ஒவ்வொன்றும் ஒரு சீராக இல்லாமல் இருப்பது நம் ப்ளாக்கின் அழகையும் கெடுத்து விடும் .மேலும் template மாற்றும் போது மீண்டும் ஒவ்வொரு ஓட்டளிப்புப் பட்டையை இணைப்பது எரிச்சல் தரும் விடயமாகும் .


எனவே தமிழ்10 , தமிளிஷ் , நம்குரல் , உலவு போன்ற தளங்களின் ஓட்டளிப்புப் பட்டைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே சீராக உங்கள் தளத்தில் தோன்றும் வகையில் வடிமைத்து இருக்கிறேன் .இதனால் நீங்கள் ஒருமுறை இதனை உங்கள் தளத்தில் இணைத்து விட்டாலே நான்கு ஓட்டளிப்புப் பட்டைகளும் ஒரே சீரகாத் தோன்றும் .மேலும் நீங்கள் template மாற்றும் போதும் இலகுவாக ஒரே முறையில் அணைத்து ஓட்டளிப்புப் பட்டைகளையும் இணைத்து விடலாம் .எனக்குத் தெரிந்த திரட்டித் தளங்கள் அனைத்தையும் இதில் இணைத்துள்ளேன் ஏதேனும் விட்டுப் போயிருந்தால் கூறுங்கள் .இணைத்து விடுகிறேன் .(உலவு தளத்துக்கு ஓர் வேண்டுகோள் - அனைத்து திரட்டி தளங்களின் ஓட்டுப் பட்டையும் ஒரே அளவில் உள்ளது உளவின் அளவு சிறிது குறைவாக உள்ளதால் ஒரு மாதிரி உள்ளது ...இது என் தனிப்பட்ட கருத்து)

ஓட்டளிப்புப் பட்டையை எவ்வாறு உங்கள் தளத்தில் இணைப்பது



  • Blogger -> Layout -> Edit HTML க்கு செல்லவும்.
  • "Expand Widget Templates" checkboxசை சொடுக்கவும்.
  • "<data:post.body/>"யை தேடவும்.
  • "<data:post.body/>" கீழ் இந்த கோடினை சேர்க்கவும்,

<div>

<script type='text/javascript'>

submit_url =&quot;<data:post.url/>&quot;

</script>

<script src='http://tamil10.com/submit/evb/button2.php' type='text/javascript'>

</script>

<script type='text/javascript'>

submit_url =&quot;<data:post.url/>&quot;

</script>

<script src='http://www.tamilish.com/tools/voteb.php' type='text/javascript'/>

<script type="text/javascript">submit_url = '<data:post.url/>';</script>

<script type="text/javascript" src="http://www.namkural.com/evb/button.php"></script>
<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

</div>

  • "Save Template" பட்டனை சொடுக்கவும்.
  • வாக்களிப்பு பட்டை தங்கள் ப்ளாகில் சேர்ந்துவிடும்.

tamilil menporul

Monday, February 22, 2010 அப்பாவி தமிழன்


இணையத்தில் ஓர் குறிப்பிட புகைபடத்தை தேடுவது மிகவும் சுலபமானதும் எளிதானதும் கூட .ஆனால் இணையத்தில் இருக்கும் பரவலான புகைப்படங்கள் copyrights (உரிமங்கள் ) மூலம் காக்கப்படுகின்றன .அதையும் மீறி இப்புகைப்படங்களை உபயோகிப்பதின் மூலம் நாம் தண்டனைக்குள்ளாகலாம்.நம்மைப் போன்ற சாதரண மக்களுக்கு இதனால் பெரிதாக பிரச்னை இல்லை என்றாலும் , ஓர் உரிமம் பெற்ற புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பிற தளங்களிலோ அல்லது வியாபார நோக்கிலோ பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும் .இதனைத் தவிர்க்க வேண்டுமெனில் நாம் உரிமம் பெறாத புகைப்படங்களையே பயன்படுத்த வேண்டும் .இவ்வாறான உரிமம் பெறாத புகைப்படங்களை இலவசமாக சில தளங்கள் வழங்குகின்றது .இதனை நாம் நமது இணையத்திலோ அல்லது வியாபார நோக்கிலோ இலவசமாக பயன்படுத்த முடியும் .குறிப்பாக புகைப்பட கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் இது மிகவும் பயன்படும் .இலவசமாக உரிமம் பெறாத (copyright images )படங்களை தரும் இணையதளங்களின் தொகுப்பை பெற இங்கே சொடுக்கவும்

ப்ளாக்பெர்ரி செல்பேசிக்கான இலவச 30 மென்பொருட்கள்

அப்பாவி தமிழன்


ப்ளாக்பெர்ரி செல்பேசிக்கான இலவச 30 மென்பொருட்கள்

செல்பேசி சந்தையில் , நோக்கியா மற்றும் ஐ போன் போன்ற செல்பேசிகளுக்கு பல்வேறு தரப்பட்ட இலவச மென்பொருட்கள் இணையத்தில் குவிந்துள்ளன .ஆனால் ப்ளாக்பெர்ரி மற்றும் ஒ ௨ போன்ற செல்பேசிகளுக்கு இதுபோன்ற மென்பொருட்கள் மிகவும் குறைவே .அப்படி இருந்தாலும் அவை பணம் செலுத்தி வாங்குவதற்கென்றே வடிவமைக்கப் பட்டிருக்கும் .இதையும் தாண்டி சில இலவச மென்பொருட்கள் ப்ளாக்பெர்ரி செல்பேசிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது .இங்கே சென்று அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .